History logo

Tamizhar Vazhakkam

Tamizhar Vazhakkam

By Arun RamasamyPublished 6 months ago 3 min read
1
Tamizhar Vazhakkam
Photo by Ramakrishnan Nataraj on Unsplash

https://www.youtube.com/channel/UCNQLM1iDWfvFYTP57afjUnQ

ஒரு இளம் பெண்ணின் கணவர் இறந்துவிடுகிறார். அந்த இறந்த வீட்டில் மூதாட்டி ஒருவர் , செம்பு நிறைய நீர் எடுத்து வந்து அனைவர் முன்னிலையிலும் வைத்து அதில் பூ வின் 3 இதழ்களை மிதக்க விடுகிறார் . அவர் கூற வரும் செய்தி என்ன ?

விடை - அந்த கணவரை இழந்த பெண் 3 மாதம் கருவுற்றிருக்கிறாள் என்பதை அனைவருக்கும் உணர்த்துவதே அந்த மூதாட்டியின் செயல் . இது ஒரு பண்டைய கால தமிழர் வழக்கம் ஆகும்.

தவிட்டுக்கு பிள்ளை

பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் நிறைய பிள்ளைகளை உடைய பிற பெற்றோர்களிடம் இருந்து பிள்ளைகளை வாங்கி கொள்வது இயல்பு.

அவ்வாறு பெற்றுக் கொள்ளும்போது அந்த பிள்ளைக்கு மாற்றாக ஒரு கைப்பிடி தவிட்டினை கொடுப்பார்கள். தவிட்டிற்கு பெரிய விலை மதிப்பு இல்லை. தவிட்டுக்கு பிள்ளையை விற்றவர்கள் தங்கள் பணத்தாசையால் பிள்ளையை விற்கவில்லை என்ற மன நிம்மதி கொள்ள முடியும். அதே வேளை வாங்கியவரோ விலைக்கு வாங்கிய உணர்வோடு பிள்ளையிடம் முழு உரிமை கொண்டாடமுடியும் .

இவ்வாறு தவிட்டுக்கு பிள்ளையை வாங்கி குழந்தை இல்லை என்ற மனக்குறையை போக்குவது பண்டைய கால தமிழர் மரபு ஆகும்.

வழிபாடு

இந்த உலகில் பிறந்த எல்லா உயிர்களும் தம் மொழியில் தான் கடவுளிடம் உரையாடுகின்றன. நம் மொழியில் கடவுளை வழிபடுவதற்கான எண்ணற்ற மந்திரங்கள் உள்ளன.

வேற்று மொழியில் வழிபாடு செய்வது தான் சரி என்று கூறுவது மூடநம்பிக்கையுடன் கூடிய அடிமைத்தனமாகும்.

உங்கள் கடவுளிடம் உங்கள் மொழியில் வழிபாடு செய்வது தான் மனித இயல்பு அதுவே என்றும் சிறந்தது.

சாதி (குடி)

சங்ககாலத்தில் குடி அடிப்படையில் பிரிக்கப்பட்ட மக்கள் சோழர் காலத்தில் சாதி அடிப்படையில் பிரி க்கபட்டார்கள். குடி, சாதி என்று பெயர் மட்டும் தான் மாற்றப்பட்டது.

இந்த இரண்டு காலங்களிலும் மக்கள் பிரிவின் அடிப்படையில் தாழ்த்தப்படவில்லை.

எந்த ஒரு பிரிவினரும் தீண்டத்தகாதவர்களாக வைக்கப்படவில்லை. ஆலய நுழைவு யாருக்கும் மறுக்கப்படவில்லை.

பல்லாங்குழி

கருவுற்ற பெண்களும், முதற் பூப்படைந்த இளம் பெண்களும் பொழுது போக்கிற்கு விளையாடுவதாக மட்டுமே இன்று பல்லாங்குழி ஆட்டம் பார்க்கப்படுகிறது .

ஆனால் பல்லாங்குழி ஆட்டம் கூறுவரும் செய்தி சற்று ஆழமானது. முன்னொருகாலத்தில் சமநிலை நிறைந்த நம் சமூகத்தில் ஆட்டத்தின் விளைவாக ஒருவருடைய செல்வம் அடுத்தவர் கைக்கு எளிமையாக எந்த வன்முறையும் இன்றி செல்கிறது. ஒரு இடத்தில குவிகின்ற செல்வம் வேறொரு இடத்தில இருந்து எடுக்கப்பட்டதே. ஆக பொதுவுடைமை உணர்வு நிறைந்ததாக இருந்த நம்சமூகத்தில் தனி உடைமை உணர்வினையும் மறுபக்கம் வறுமையினையும் நியாயப்படுத்தும் வெளிப்பாடே இந்த பல்லாங்குழி ஆட்டம்.

துறவு

துறவு என்னும் சொல் திருமணம் வேண்டாத வாழ்க்கையைக் குறிப்பதாகவே தமிழர்களால் இதுவரை கருதப்படுகிறது.

சமண பௌத்த மதங்கள் தமிழ்நாட்டில் செல்வாக்கு இழந்து போனமைக்கு அவை துறவு நெறியை வற்புறுத்தியது ஒரு காரணமாகும். துறவுக்குரிய தெய்வங்களோ துறவியான தெய்வங்களோ தமிழர் மரபில் இல்லை .

திருமணமும் திருமண சடங்குகளுக்கும் விருப்பத்திற்கும் பெருமைக்கும் உரியனவாக இன்றளவும் தமிழர்களால் போற்ற பெறுகின்றன. திருமணம் மனித வாழ்வை முழுமையாக்குகிறது என்னும் கருத்து இன்றளவும் ஆதிக்கம் செலுத்துகிறது.

வள்ளுவருக்கு பிறகு தமிழ் இலக்கியங்களும் துறவின் பெருமையினை பேசவில்லை. வாய்மொழி இலக்கியங்களும் துறவினை பெருமைப்படுத்தி பேசவில்லை.

சாமியார்

63 நாயன்மார்களில் பெரும்பான்மையினர் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு கொண்டு தான் இறை தொண்டும் செய்தார்கள். நம் தமிழ் சமூகம் சாமியார்களையும் துறவிகளையும் கொண்டாடியதில்லை.

இன்றோ பல போலி சாமியார்களை நம்பி மக்கள் பொருளாதாரத்தை கொட்டுகிறார்கள். அந்த சாமியார்களோ மக்களுக்கு நல் வழி காட்டாமல் மக்களின் பேராசையை தூண்டிவிடுகிறார்கள்.

தமிழ் நாட்டிற்கு சம்பந்தமே இல்லாத பல சாமியார்களின் கோவில்கள் இன்று தமிழகம் எங்கும் பரவி இருக்கிறது.

நம் முன்னோர்கள் கூறிய இறையியல் வழிகாட்டுதலின் படி செயல்பட்டால் , இது போன்ற போலி சாமியார்களை நம் சமூகத்தில் இருந்தே விரட்டிவிடலாம்.

பிறரிடம் பிச்சை எடுப்பது மிக கேவலமான செயலாகவே தமிழ் சமூகத்தில் கருதப்பட்டது. வறுமையின் காரணமாக பிச்சை எடுக்கும் சிலர் அதனை தான் பிறந்து வளர்ந்த ஊரில் செய்வதில்லை.

பழங்குடி மக்களிடத்தில் பிச்சை எடுக்கும் வழக்கம் இல்லை . நாகரீகமடைந்த , சமத்துவம்மற்ற சமூகங்களில் மட்டுமே பிச்சை எடுக்கும் வழக்கம் தோன்றியிருக்கிறது. துறவிகளுக்கு அது தேவையாக இருந்ததனால் பிச்சை எடுக்கும் வழக்கத்திற்கு சமய அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது. தமிழ் நாட்டில் பிச்சை புகுந்த கதை இதுவே.

உங்கள் வீட்டு உணவை சாப்பிட்டு இருக்கிறேன் என்பதற்கு பதிலாக உங்கள் வீட்டு உப்பை சாப்பிட்டு இருக்கிறேன் என்பதை மக்கள் ஏன் பயன்படுத்துகிறார்கள் தெறியுமா ?

சம்பளம் என்றால் நமக்கு காகிதத்தால் செய்த பணம்தான் கண் முன்னே தெரியும் . ஆனால், அந்த காலத்தில் வேலையாட்களுக்கு சம்பளம் என்பது நெல்லும், உப்பும்தான். பண்டமாற்று முறை வியாபாரத்திலும் உப்புதான் முதன்மைப்பொருளாக விளங்கியது .

https://youtu.be/gKkw6afMsRA

பிழைப்புக்காக கூலிக்கும், சம்பளத்திற்கும் அண்டியிருந்தவர்களையொட்டி பிறந்த வழக்குகள்தாம்.... உப்பைத் தின்னு வளர்ந்தவர், உப்புக்கு உழைத்தவர் போன்றவை.

முதலாளி வழங்கிய உப்பைத் தின்னு வாழ்வதால் அவருக்கு மிகுந்த கடமையுணர்வு ( விசுவாசம்) , நன்றியுடன் - இருக்க வேண்டும் என்பதை இங்கு உணர்த்துகிறது.

கூலி, சம்பளம் போன்ற தமிழ்ச்சொற்கள் வந்த வழி மூலம் இவற்றை விளங்கிக் கொள்ளலாம்.

எது செல்வம் ?

பிள்ளைகள்

நிலம்

கால்நடைகள்

உறவுகள்

உடல் நலம்

தங்கம்

பணத்தின் மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும் , அதனால் பணத்தினை நிலையான

செல்வமாக கருத முடியாது.

அரசியல்

அரசியல் என்பது ஆட்சி, அதிகாரம் பற்றிய கோட்பாடுகளும் நடைமுறைகளும் ஆகும். அரசியல் என்பதனுள் அரசு, அரசாட்சி, அரசை ஆளும் அரசன், நாடு, நாட்டில் வாழும் மக்கள், மக்களின் வாழ்க்கைத்தரம் போன்ற உட்கூறுகள் பொதிந்திருக்கின்றன. ஒரு அரசின் செயல்பாடுகள், மக்கள் நல திட்டங்கள் போன்றவற்றை குறிப்பதற்காகவே அரசியல் என்னும் சொல் பயன்பட்டது.

ஆனால் இன்று அரசியல் என்ற சொல் காலை வாரி விடுவது, காட்டி கொடுப்பது, துரோகம் செய்வது, முதுகில் குத்துவது, பிறரை நம்ப வைத்து ஏமாற்றுவது , கொள்ளையடிப்பது போன்ற பல சமூக விரோத செயல்களை குறிப்பதற்காக நம் சமூகத்தில் பயன்படுத்த பட்டு வருகிறது.

https://youtu.be/gpzwEVhN8AM

Ancient
1

About the Creator

Arun Ramasamy

Nature Lover, Just go with the flow, techno freek.

Do what you can.. don't when you cannot.

Reader insights

Be the first to share your insights about this piece.

How does it work?

Add your insights

Comments

There are no comments for this story

Be the first to respond and start the conversation.

Sign in to comment

    Find us on social media

    Miscellaneous links

    • Explore
    • Contact
    • Privacy Policy
    • Terms of Use
    • Support

    © 2024 Creatd, Inc. All Rights Reserved.