Fiction logo

சுவர்கள் பேச முடிந்தால்

ஏன் முடியாது? முடியும்.. நமக்குத்தான் அது பேசும் மொழி புரியவில்லை

By Shafi mohamed Syed abdagirPublished about a year ago 3 min read

I woke up several times before dawn...

I was tired of waiting for dawn...

Life is the dawning time...

It gives dawn to tomorrow's generation,

Practicing with us today...

If we understand this everything will speak to us...

Why... including this un-dawn hour...

This story is a small part of it...

Read... Let me know myself...

To get to know you...

Read on...

to read in English... click here

விடியாத நேரத்திற்குள் பலமுறை கண் விழித்தேன்...

விடிந்து விடும் என்று காத்திருந்து கண் அயர்ந்து போனேன்...

வாழ்க்கையே விடியாத நேரம்தானே...

அது நாளைய தலைமுறைக்கு விடியலை தர,

இன்று நம்மோடு பயிற்சித்து பார்க்கிறது...

இதை நம் புரிந்து கொண்டால் அனைத்தும் நம்முடன் பேசும்...

ஏன்... இந்த விடியாத நேரம் உட்பட...

அதில் ஒரு சிறு துணுக்கு இந்த கதை...

படியுங்கள்... நான் என்னை தெரிந்துகொள்ள...

நீங்கள் உங்கைளை தெரிந்து கொள்ள...

படியுங்கள்...

சுவர்கள் பேச முடிந்தால், ஏன் முடியாது? முடியும்.. நமக்குத்தான் அது பேசும் மொழி புரியவில்லை. நான் ஒரு சிறு கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருந்தேன். நான் பிழைப்புக்காக வீட்டு சுவர்களுக்கு சுண்ணாம்பு அடிக்கும் வேலை செய்து கொட்டிருப்பவன். நான் பல சுவர்களை வெள்ளை வெளேரென்று பளிச்சிட செய்திருக்கிறேன். என்னால் முடிந்தது, ஏன் பல பேரால் முடிந்தது அனைத்தையும் துடைத்தேறிவது தானே. இந்த சிந்தனைக்குக் காரணம் அந்த சுவர்தான். அது பேசியது, ஆம் அது பேசுவதை, அந்த வீட்டில் வாழும் தாய் எனக்கு கேட்க வைத்தாள். இன்று அதை நினைத்தாலும் என் முடிக்கால்கள் புல்லரிப்பில் நிமிர்கின்றன.

ஒரு நாள் காலையில் நான் அந்த வீட்டு கதவை தட்டினேன். பெருபாலும் நான் வெள்ளை அடிக்கச் சென்ற அனைத்து வீடுகளிலும் ஏதேனும் ஒரு விசேசதிற்கு அவர்கள் வீடுகளை வெள்ளை அடிக்க விரும்புவார்கள். ஆனால், நான் நுழைந்த அந்த வீடு, அவ்வாறு இல்லை என்பதை நுழைந்தவுடன் என்னால் யூகிக்க முடிந்தது.

அது ஒரு பெரிய வீடுதான், என்னால் அதாவது ஒரு ஆளால் அவ்வீட்டை வெள்ளை அடிக்கமுடியாது. நான் இதனை அந்த வீட்டு கதவை திறந்து என்னை உள்ளே வரசெய்திருந்த அந்த வீட்டு வேலைக்காரனிடம் சொன்னேன்.

அவர், "இல்ல தம்பி முழு வீட்டுக்கும் இல்ல, மேலே போப்பா, அய்யா சொல்லுவாரு" என்று பதிலளித்தார். நான் படிகள் ஏறி மேல் தலத்தில் இருக்கும் அந்த அறையின் கதவருகில் நின்று "அய்யா", "அய்யா" என்று அழைத்தேன். "உள்ளே வாப்பா" என்று ஒரு அழைப்பு குரல் கேட்டது.

அது ஒரு படுக்கை அறை, ஒரு பெண் அழுதுகொண்டிருந்தாள், அவளருகில் ஒருவன். அவன் அவளது கணவன் தான் என்பதை என்னால் உணர முடிந்தது.

அவன் அப்பெண்ணிடம், "நமக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான். நீ எப்பொழுதும் இந்த சுவற்றை பார்த்து அழுதுகிட்டேயிருந்த எப்படி? இந்த சுவற்றில ஒன்னுமில்ல. வேணுமென்றால் இவரை இந்த சுவற்றில் வெள்ளை அடிக்கச் சொல்லுறேன். எல்லாத்தையும் நீ மறந்துட்டு இயல்பான வாழ்க்கைக்கு திரும்புமா" என்றார்.

நான் அந்த சுவற்றில் அப்படி என்ன இருக்கிறது என்று என் கண்களால் துழாவினேன். என் கண்களுக்கு ஒண்றும் அகப்படவில்லை, மேலும் அது வெள்ளை அடிக்க அவசியமில்லாமல், நன்றாகவே இருந்தது.

அவள் கணவன் அவ்வாறு கூறியதும் அவள் சட்டென்று எழும்பி சுவற்றை மறைத்துக்கொண்டு "நான் என் பிள்ளை எழுதியதை அழிக்கவிடமாட்டேன்" என்று கதறி அழுதாள். எனக்கு குழப்பமாயிருந்தது.

அவள் கணவன் அவளை கவலையுடன் வெறித்து பார்த்து கொண்டிருந்தான். அவள் அழுகை ஓயவில்லை. சுவர் முழுவதையும் தன் இருகரம் நீட்டி ஆரத்தழுவியபடி "நான், என் பிள்ளை எழுதியதை அழிக்கவிடமாட்டேன்" என்று புலம்பியபடி அழுது கொண்டிருந்தாள்.

சில வினாடி கழித்து அவளது கணவன் என்னிடம் மன்னிப்பு கேட்டபடி என்னை அறைக்கு வெளியே அழைத்து வந்தான். நான் அவனிடம் "அந்த சுவற்றில் ஒன்றுமில்லையே…, மன்னிக்கணும் உங்கள் பிள்ளை இறந்து விட்டதா?" என கேட்டேன்.

அவன் சிறிது மௌனத்திற்கு பிறகு, "இல்லை எங்களுக்கு பிள்ளைகள் இல்லை, இனியும் பிள்ளைகள் இருக்க போவதுமில்லை" என்றான்.

"என்ன சொல்லுறீங்க, எனக்கு புரியல" என்று மேலும் வினவினேன்.

"எங்களுக்கு பிள்ளைகள் பெற்றுக்கொள்ளும் அதிர்ஷ்டமில்லை" என்றான்.

மேலும் நான், "ஆனால் உங்கள் மனைவி, அந்த சுவற்றில்...?" அவன் என்னை ஏறிட்டு என் குழப்பமடைந்த முகத்தை வெறித்து பார்த்தான். பிறகு, "அவள் பிள்ளைகள் பிறந்தால், அந்த சுவற்றில் பிள்ளைகள் எவ்வாறெல்லாம் கிறுக்கும் என்பதை கதை கதையாக சொல்லி மகிழ்வாள், என்னையும் பூரிப்பில் ஆழ்த்துவாள். அது நடக்காது தெரிந்தவுடன் அதை அவளால் ஏற்றுக்கொள்ள முடிவில்லை" என பெருமூச்சை விட்டு என்னை விட்டு விலகினான்.

நான் அவனிடம் "நான் மறுபடி ஒருமுறை அந்த சுவற்றை பார்க்க அனுமதிக்க முடியுமா?" என்று கேட்டேன். அவன் என்னை வெறித்து பார்த்தான்... பிறகு அனுமதித்தான்.

நான் மீண்டும் அவ்வறைக்குள் சென்றேன். அந்த சுவற்றை அவள் பாசத்துடன் தடவி மௌனமாக அழுது கொண்டிருந்தாள். நான் உள்ளே வந்ததை அவள் கவனிக்கவில்லை, உணரவில்லை. நான் அந்த சுவற்றை பார்த்தேன். ஆம் அது பேசியது. மன்னிக்கணும் இது அவர்களின் அந்தரங்கம். ஆனால் ஒரு தாய் குழந்தையுடன் கொஞ்சுவதை யார்தான் ரசிக்காமல் இருக்கமுடியும்?

நான் கட கடவென்று நடந்து விரைவாக என் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். என்வீட்டு சுவற்றில் என் பிள்ளை கிறுக்கியதை மன்னிக்கணும் என் குழந்தை சுவற்றுடன் பேசியதை, என் விட்டு சுவர் சுவாரஸ்யமாகச் சொல்ல ஆரம்பித்தது...

நண்பர்களே... சுவற்றை கவனியுங்கள் அது பலக்கதைகள் சொல்லும்... குழந்தைகளை சுவற்றுடன் பேச அனுமதியுங்கள், அது குழந்தைகளின் கற்பனையை விரிவடைய செய்யும். அனல் இன்றைய குழந்தைகளின் உலகம் 6" tablet-ல் சுருங்கச் செய்துவிட்டோம். அவர்களை விளையாட்டு மைதானத்தில் விளையாட ஊக்குவியுங்கள், சுவற்றுடன் பேச வரைய அனுமதியுங்கள். அவர்களின் ஆரோக்கியத்தையும் ஆயுளையும் நீடிக்க அது ஒன்றே வழி.

என் பிள்ளை பள்ளியிலிருந்து திரும்பினான். நானும் என் பிள்ளையும் சுவற்றுடன் உரையாட ஆரம்பித்தோம்.

FantasyShort StoryLovefamily

About the Creator

Shafi mohamed Syed abdagir

I am a B. Sc Mathematics graduate. I am very much interested in mathematics and i am helping to my children in Mathematics.

I felt that if i share my knowledge to others it will help me to understand more about lives.

Enjoyed the story?
Support the Creator.

Subscribe for free to receive all their stories in your feed. You could also pledge your support or give them a one-off tip, letting them know you appreciate their work.

Subscribe For Free

Reader insights

Be the first to share your insights about this piece.

How does it work?

Add your insights

Comments

There are no comments for this story

Be the first to respond and start the conversation.

    SMSAWritten by Shafi mohamed Syed abdagir

    Find us on social media

    Miscellaneous links

    • Explore
    • Contact
    • Privacy Policy
    • Terms of Use
    • Support

    © 2024 Creatd, Inc. All Rights Reserved.